"திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லுபடியாகாது" - அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு
திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது என்பது, செல்லபடியாகாது என, அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரியான்ஷி என்கிற ஷாம்ரீன் மற்றும் அவரது இளம் மனைவி ஆகியோர், கடந்த மாதம் தாக்கல் செய்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சி.திரிபாதி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மணப்பெண், கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி மதம் மாறியிருப்பதாகவும், ஒரு மாத இடைவெளியில் கடந்த ஜூலை 31ஆம் தேதி திருமணம் நடைபெற்றிருப்பது தெரியவருவதாகவும், நீதிபதி குறிப்பிட்டார்.
திருமணத்திற்காக, மதம் மாறுவதை, ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, லவ் ஜிகாத் திருமணங்களை தடுக்கும் வகையில், புதிய சட்டம் ஒன்று இயற்றப்படும் என, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
Comments